விளமல் சரணாலயம் 
ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் சன்னதி
  ஸ்ரீ தியாகராஜ சுவாமி
 ஸ்ரீ தட்சிணகாளி 

            அண்ணன் சுவாமிகளின் சீடர்களில் சிலர்,அண்ணனை மனதில் இருத்தி ஞான யக்ஞம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.சிலர் அண்ணனை பற்றி வெளி உலகுக்கு சொல்லி தான் பெற்ற அருளை இவ்வையகமும் பெறவேண்டுமென உழைக்கின்றனர்.இவ்வாறு கர்ம யோகமும் பக்தி யோகமும் செய்து அண்ணனை எப்போதும் தன் உயிரில் இருத்தி வாழும் ஒரு மாமனிதர்தான் திரு.சிவப்பிரகாசம் என்ற விளமல் ஐயா அவர்கள்.

                புதூரில் 1938 - ம் ஆண்டு பிறந்து அண்ணனின் நண்பனாய் இருந்து இவரும் அண்ணனும் தோழர்களாய் இளம் பிராயத்தில் விளையாடி வாழ்ந்த காலங்களை நினைவுகூறுகின்றார் விளமல் ஐயா அவர்கள்.பின்பு அண்ணனிடம் பராசக்தி வெளிபட்டு நிற்பதை தன் அனுபவத்தில் உணர்ந்து.அண்ணனை தன் தாயாக எண்ணி சரணாகதி அடைந்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் அண்ணனின் திருவடியில் சமர்ப்பித்து கர்ம யோகம் செய்து வாழத்தொடங்கினார்கள். அண்ணனிடம் மிகவும் உரிமையோடு பழகும் தைரியமும் பக்தியும் இவரிடம் இருந்தது ஒரு வியப்பான விஷயம். அண்ணனும் அவரவரது சுபாவங்களை ஏற்றுக்கொண்டு அனைவரையும் அரவணைத்து அருள்பாலித்தார்கள்.

               அண்ணனின் ஜீவசமாதிக்கு பின்பு 1989 - ம் வருடமே அண்ணனுக்கு ஒரு கோயில் எழுப்ப சீடர்கள் பலர் முடிவு செய்தனர்.அண்ணனின் பிரதான சீடரான திரு.சுவாமினாதன் அவர்கள் கோமல் என்ற இடத்தில் தனக்கு சொந்தமான சில ஏக்கர் திடலை அண்ணனுக்கு சமர்ப்பணம் செய்தார்கள்.அவ்விடத்தை சுத்தம் செய்து ஆலயம் எழுப்ப தன் முழு முயற்சியையும்,உழைப்பையும் விளமல் ஐயா அர்ப்பணித்தார்கள்.

      விளமல் ஐயா,குடும்பத்தினர் மற்றும் பல சீடர்கள், பக்தர்கள் ஒன்று சேர்ந்து அயராது பாடுபட்டு கரிவேலம் மண்டிக்கிடந்த அந்த திடலை சுத்தப்படுத்தி (காலணி அணியாமல்) அவ்விடத்தில் மல்லிகை,ரோஜா போன்ற மலர்களின் தோட்டத்தை ஏற்படுத்தி அண்ணனை மலர்களின் வாசனையில் ஆழ்ந்திருக்க செய்தார்கள் விளமல் ஐயா. இந்த வரலாற்றை நாம் கேள்விபட்டபோது இவ்வளவு பராபக்தியோடும் சரணாகதியோடும் உழைக்கும் இந்த கர்மயோகி அண்ணனின் அருள் இல்லாமல் இவை அனைத்தையும் சாதித்திருக்க முடியாது என்று எண்ணி அவரிடம் கேட்டபோது,"என்னை இயக்குபவர் அண்ணன்.,என்னால் ஆவது ஒன்றுமில்லை..."என பணிவுடன் கூறுகின்றார்.

        கோமல் அருணாலயத்தில் சில காலங்கள் தன் இறைபணியை செய்த விளமல் ஐயா அவர்கள்,தனது குடும்ப சூழல் மற்றும் பணி நிமித்தமாக திருவாரூர் வர ஏதுவாயிற்று.எனவே இவ்விடத்திலேயே அண்ணனுக்கு நிரந்தரமாக ஒரு ஆலயம் எழுப்ப எண்ணினார்கள். அதற்கான இடமும் அண்ணனின் அருளால் விளமலில் கிடைக்கவே, விளமல் ஐயா பல பக்தர்களின் உதவியுடன் 1999 ல் துவங்கி 2004 - ம் ஆண்டு முடிய அரும்பாடுபட்டு ஒரு அற்புதமான ஆலயத்தை அண்ணனுக்கு எழுப்பி, அண்ணனை சிறப்பாக வழிபட்டு வருகிறார்கள்.பல பக்தர்களுடன் விளமல் ஐயா எல்லா வழிபாடு, விழாக்களை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் அண்ணனுக்கு செய்து மகிழ்கின்றார்கள்.பல பக்தர்கள் அவ்விழாக்களிலும் பூஜைகளிலும் கலந்துகொண்டு அண்ணனின் அருள்பெற்று ஆனந்தமாய் வாழ்கின்றனர்.

 இந்த இணையதள வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது நவராத்திரி விழா விளமலில் நடந்துகொண்டிருந்தது.அப்போது அண்ணனின் ஐம்பொன் திரு உருவம் தொடர்ந்து நிறம் மாறும் வகையில் மின்னொளி அமைப்பை செய்து வைத்திருந்தார்கள்."அண்ணனின் தேகம், நிறம் இரண்டும் எந்த அம்பாள் அவரது உடலில் இறங்குகிறாளோ அதற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே இருந்தது. அதனை உணர்த்தும் விதமாகவே இந்த ஒளி அமைப்பை செய்துள்ளேன்..." என மகிழ்ச்சியுடன் கூறினார்கள் விளமல் ஐயா அவர்கள்.இவரது ஈடுபாடும் பக்தியும் அண்ணனை மகிழ்வித்து நிற்கின்றது.

               கடந்த 45 ஆண்டுகளாக காமேஸ்வரம் கடற்கரையில் வங்கதேசத்து ஐயா அவர்களுக்கு கடல் பூஜையும்,பின்பு திருப்பூண்டி சிந்தாமணி திடலில் ஆண்டாள்புரம் சுவாமிகளுக்கு திடல் பூஜையும் சிறப்பாக நடத்தி வழிபட்டு வருகிறார்கள்.

     "என்னால் ஆவது ஒன்றுமில்லை...எல்லாம் உன்னால்தான் ஆவது என்றுணர்ந்தேன்...",என அண்ணனின் அருளுணர்வில் ஒன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார் விளமல் ஐயா அவர்கள்.

ஆலயத்தில் அமைந்துள்ள சன்னதிகள்:
  • தவக்கோலத்தில் அண்ணனின் திரு உருவம் (மூலவர்-மார்பல்)
  • தவக்கோலத்தில் அண்ணனின் ஐம்பொன் திரு உருவம் (உற்சவர்)
  • தியாகராஜ சுவாமி - Mortar made
  • மஹாகாளி (தட்சிணகாளி)
       அண்ணனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் அரிய புகைப்படங்களும், இக்கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களின் புகைப்படங்களும் இவாலயத்திற்கு அணிசேர்க்கும் வகையாக இடம்பெற்றுள்ளன.


 கோயிலில் நடைபெறும் பூஜை/விழாக்கள்:

   வெள்ளிக்கிழமை பூஜை      –            மாலை 06.45 மணி 

· பௌர்ணமி முடி பூஜை        -            இரவு   08.00 மணி

   அண்ணன் சுவாமிகள்
   பிறந்தநாள் விழா அபிஷேகம் -         மாலை 06.00 மணி
   (போகி பண்டிகை அன்று)

·அண்ணன் சுவாமிகள் குருபூஜை விழா          - 
  •  திருவிளக்கு பூஜை (21 பிப்ரவரி இரவு)
  •  குருபூஜை அபிஷேகம்(22 பிப்ரவரி காலை)
  •  பூச்சொரிதல் (22 பிப்ரவரி இரவு)
· தமிழ் புத்தாண்டு              -    

   அபிஷேகம் (மாலை 06.00 மணி)

 நவராத்திரி விழா  - தினமும் மாலை 06.30 மணி

   (அமாவாசையிலிருந்து         - .

   விஜயதசமி வரை 11 நாட்கள்)

   விஜயதசமி அன்று மாலை அபிஷேகம் 

  கடல் மற்றும் திடல் பூஜை    - ஆடி  மற்றும் தை 
  அமாவாசை அன்று

 காலை 06.00 மணி தொடங்கி மாலை 06.00 மணி வரைதரிசன நேரம் -      

              காலை 06.00 மணி-இரவு 09.00 மணி  

  

வழித்தடம்

      திருவாரூர் To மன்னார்குடி செல்லும் சாலையில் விளமல் பாலத்திலிருந்து ½ கிமீ தொலைவில் விளமல்  IOB  எதிரில். (திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது).

தங்கும் வசதி   -     

        பேருந்து நிலையத்திற்கு அருகிலும்,ஆலயத்திற்கு அருகிலும் தங்கும் வசதி உள்ளது.ஆலயத்தில் தங்கும் வசதி மாடியில் உள்ள அன்னதான மண்டபத்தில் உள்ளது.ஆலய தரிசனத்திற்காக வரும் அன்பர்கள் இங்கு தங்கி செல்லலாம்.

தொடர்புக்கு:  

திரு.சிவப்பிரகாசம் ஐயா   அவர்கள்,

ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயம்,

3/343,பெரியார் நகர்,விளமல்,

திருவாரூர்.தமிழ்நாடு. 610004

மின்னஞ்சல் : sriannanswamigal@gmail.com 

தொலைபேசி : +91 9486319014 / +91 9344887114